பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி நவ.22 இல் காத்திருப்பு போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2017-18 ஆம் ஆண்டுக்கான பிரதமரின் பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் இழப்பீட்டுத் தொகை

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2017-18 ஆம் ஆண்டுக்கான பிரதமரின் பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் இழப்பீட்டுத் தொகை வழங்காததை கண்டித்து நவ. 22 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக கமுதி தலுகா விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க கமுதி தாலுகா செயலர் பொன்னுச்சாமி தலைமையில், கமுதி பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை வேன் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதில், கமுதி தாலுகாவின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று, பயிர்க்காப்பீடு திட்டத்தில் இழப்பீடு வழங்கப்படாததை கண்டித்து போராட்டத்துக்கு ஆதரவு திரட்டினர்.
அப்போது, வரும் 22 ஆம் தேதி மாநில பொதுச்செயலர் பெ.சண்முகம் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளதாகவும், இதில் விவசாயிகள் திரளாக பங்கேற்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். 
இந்த வேன் பிரசாரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலர் மயில்வாகனன், தாலுகா தலைவர் கருத்திருமன், பொருளாளர் கருப்பையா, துணைத் தலைவர்கள் பால்மேலி, முனியசாமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com