தேசிய நூலக வார விழா

ராமநாதபுரத்தில் 51 ஆவது தேசிய நூலக வார விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரத்தில் 51 ஆவது தேசிய நூலக வார விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
     ராமநாதபுரம் மாவட்ட மைய நூலக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட நூலக அலுவலர் பொறுப்பு ஜெ. கண்ணன் தலைமை வகித்தார். வாசகர் வட்டத் தலைவர் கே. மங்களசுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தார். ஆசிரியர் ஜி. சத்தியமூர்த்தி, எம். உலகராஜ், எஸ். தமிழரசி, சி. மாணிக்கவாசகம், மு. அப்துல்மாலிக் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். 
    நூலக வார விழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசளித்தும், மாநில நல்நூலகர் விருது பெற்ற மண்டலமாணிக்கம் நூலகர் கோ. சண்முகவேல், ராமேசுவரம் கிளை நூலக வாசகர் வட்டத் தலைவர் ஜெயகாந்தனுக்கும் நினைவுப் பரிசுகளை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே. முருகன் வழங்கி சிறப்புரையாற்றினார்.  
    நிகழ்ச்சியில், தனிப்பாடல் தரும் தனிச்சுவை எனும் தலைப்பில் ஆர். வாசு நூலக வார விழா சொற்பொழிவாற்றினார். கமுதி நூலகர் ஆர். கண்ணதாசன், முதுகுளத்தூர் பிரிங்க்ஸ்டன், தட்டானேந்தல் நூலகர் சு.சுடலைக்கண்ணு ஆகியோர்  கலந்துகொண்டனர். முன்னதாக, மாவட்ட மைய நூலகர் கு. அற்புதஞானருக்மணி வரவேற்றார். நூலகர் எஸ். கனகராஜன் நன்றி கூறினார்.
காரைக்குடி: காரைக்குடிக் கிளைநூலகத்தின் வாசகர் வட்டம் சார்பில், 51-ஆவது தேசிய நூலக வார விழா மற்றும் வாசகர் வட்டப் பரிசளிப்பு விழா  ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. 
    விழாவில், வாசகர் வட்டத் தலைவர் கருணாகரன் தலைமை வகித்தார். பேராசிரியர் அய்க்கண் முன்னிலை வகித்தார். காரைக்குடி விரைவு நீதிமன்ற நீதிபதி பிரபாகரன் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கிப் பேசினார். நகைச்சுவைப் பேச்சாளர் செந்தில்குமார், வாசு, அழகப்பா பல்கலைக்கழக துணைப் பதிவாளர் பாலசுப்பிரமணியன், ஆசிரியர்கள் ரவிச்சந்திரன், பாரதிதாசன், ஜெயபாரதி, சந்திரன் ஆகியோர் பேசினர்.
   தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றதைப் பாராட்டி, பள்ளித் தலைமையாசிரியர் ஆ. பீட்டர்ராஜா, தமிழாசிரியர் மெ. ஜெயங்கொண்டான், திருக்குறள் ஒப்புவித்தலில் தமிழக அரசு விருது பெற்ற மாணவிகள் பிரியதர்ஷினி, அலமுப் பிரியா ஆகியோருக்கு வாசகர் வட்டம் சார்பில் சிறப்புக் கேடயம் வழங்கப்பட்டது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com