வெள்ளிக்கிழமை 21 செப்டம்பர் 2018

மின்சாரம் பாய்ந்து ஒருவர் சாவு

DIN | Published: 12th September 2018 05:46 AM

முதுகுளத்தூர் அருகே மின்சாரம் பாய்ந்து ஒலி பெருக்கி நிறுவன உரிமையாளர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
  ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே காமாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா மகன் ராமர் (45). இவர் விழாக்களுக்கு ஒலி பெருக்கி அமைத்துக் கொடுக்கும் நிறுவனத்தை நடத்தி வந்தார். அதே ஊரில் ஒரு திருமண விழாவிற்காக, செவ்வாய்க்கிழமை இரவு மரத்தில் ஒலி பெருக்கி அமைக்கும் போது எதிர்பாராதவிதமாக ராமர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவரது உடலை கைப்பற்றிய போலீஸார் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் முதுகுளத்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

More from the section

கடலாடி அருகே கண்மாயில் மணல் திருட்டு: சார்-ஆட்சியர் ஆய்வு
தளிர்மருங்கூர் கோயிலில் 1008 திருவிளக்குப் பூஜை


கொழுந்துரை கிராமத்தில் தேங்கிய மழைநீரால் தொற்றுநோய் அபாயம்

முதுகுளத்தூரில் ஊட்டச் சத்து வார விழா பேரணி
குண்டாற்றில் மணல் திருட்டு