எஸ்.தரைக்குடி கண்மாயில் கருவேலமரங்களை அகற்றாததைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டம்

சாயல்குடி அருகே எஸ் .தரைக்குடி கண்மாய்க்குள் இருக்கும் கருவேல மரங்கள் அகற்றப்படாததை கண்டித்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினர்.

சாயல்குடி அருகே எஸ் .தரைக்குடி கண்மாய்க்குள் இருக்கும் கருவேல மரங்கள் அகற்றப்படாததை கண்டித்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் சாயல்குடி அருகே  எஸ்.தரைக்குடி ஊராட்சி கண்மாய் பகுதியில் சுமார் 250 ஹெக்டேர் நிலப்பரப்பு அளவில்  கருவேல மரங்கள் உள்ளன. இதனை தனி நபர் ஒப்பந்தம் எடுத்து ஓராண்டாகியும் கருவேலமரங்களை முழுவதுமாக வெட்டாமல் காலதாமதம் செய்து வருகிறார். இதுகுறித்து  விவசாயிகள் வருவாய் அலுவலர்களிடம் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் அப்பகுதியில் விவசாயப் பணிகளை தொடங்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். மரங்களை வெட்டாததால், கண்மாய்  குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படுவதாக அவர்கள் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கிராமத்தில் போராட்டம் நடத்தினர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடலாடி மண்டல துணை வட்டாட்சியர் செந்தில்வேல் முருகன், சாயல்குடி காவல் ஆய்வாளர் ஜோக்கிம் ஜெரி தலைமையிலான குழுவினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பின் போராட்டம் நடத்திய பொதுமக்களும் விவசாயிகளும்  கலைந்து சென்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com