ராமநாதபுரம்

வைகை ஆற்றில் சீமைக்கருவேல மரங்கள்:  ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு பாசன நீர் செல்வதில் தாமதம்

DIN

பரமக்குடி வைகை ஆற்றுப் பகுதியில் அதிகளவில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதால் ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்குச் பாசனநீர் தாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக வைகை அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட பாசனநீர் பார்த்திபனூர் மதகு அணைக்கு கடந்த 16 ஆம் தேதி வந்தடைந்தது. 
அங்கிருந்து ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு வினாடிக்கு 1500 கனஅடி அளவிலான தண்ணீரை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் திறந்து விட்டார். 
இந்த நீர் செவ்வாய்க்கிழமை அதிகாலை பரமக்குடியை வந்தடைந்தது. இங்கிருந்து ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு செல்ல வேண்டிய வைகை ஆற்றின் வழித்தடத்தில் ஆறு 
முழுவதும் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளதால் பாசனநீர் குறித்த நாள்களுக்குள் செல்வது கேள்விக்குறியாக உள்ளது. 
வைகை ஆறு பராமரிப்புக்காக ஒதுக்கப்பட்ட நிதி முறையாக செலவிடப்படாததால் தற்போது வைகை அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட பாசனநீர் முறையான பயன்பாட்டிற்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகளும், பொதுமக்களும் புகார் தெரிவிக்கின்றனர். 
எனவே வைகை ஆற்றில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதுடன் பாசனநீர் செல்லும் கால்வாய் பகுதிகளையும் முறையாக சீரமைக்க 
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

SCROLL FOR NEXT