ராமநாதபுரம்

தொழுநோய் விழிப்புணர்வு முகாம்

DIN

திருவாடானை அருகே உள்ள நம்புதாளையில் தொழுநோய், தொற்று நோய் குறித்த கள ஆய்வு மற்றும் விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது
 மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் மருத்துவர் குமரகுருபரன் அறிவுறுத்தலின்படி, திருவாடானை வட்டார மருத்துவ அலுவலர் வைதேகி தலைமையில் மருத்துவர் கார்த்திகேயன் சுரேஷ் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் அடங்கிய குழுவினர் நம்புதாளை பகுதியில் தொழுநோய் ஆய்வு, விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டனர்.
 நம்புதாளை பல்லாக்கு ஒளியுல்லா தெரு, பாவோடி உள்ளிட்ட பகுதிகளில் இக்குழுவினர் வீடு வீடாகச் சென்று காசநோய், தொழு நோய் மற்றும்  புற்றுநோய் அறிகுறிகள் பொதுமக்களிடம் உள்ளதா என ஆய்வு செய்தனர். மேலும், பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. இதில், மாவட்ட காசநோய் மைய அலுவலர் மகேந்திரன், ராகுல் உள்ளிட்டோர் சிகிச்சை முறைகள், அரசு சார்பில் வழங்கப்படும் சிகிச்சை உதவிகள் ஆகியன குறித்து எடுத்துரைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒசூா் அருகே பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி வேட்பாளா் மீது தாக்குதல்

ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா

ஒசூரில் கந்து வட்டி வசூலித்த தனியாா் நிறுவன அதிகாரி கைது

கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளா் கே.கோபிநாத் மீது வழக்குப் பதிவு

8 லட்சம் வாக்குகள் பெற இலக்கு: பாஜக வேட்பாளா் பேச்சு

SCROLL FOR NEXT