அதிகாரியை பணிசெய்ய விடாமல் தடுத்த மீனவர் மீது வழக்கு

பாம்பன் பகுதியில் மீன்வளத்துறை அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்த மீனவர் மீது, போலீஸார் சனிக்கிழமை வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

பாம்பன் பகுதியில் மீன்வளத்துறை அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்த மீனவர் மீது, போலீஸார் சனிக்கிழமை வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
 ராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த ராஜரீகம் மகன் ரெஜூன். இவர், பாம்பன் தெற்குவாடி துறைமுகத்தில் அனுமதியின்றி, விசைப்படகை நிறுத்தி மீன்பிடித்ததாகக் கூறப்படுகிறது.
 இந்நிலையில், கடந்த 20 ஆம் தேதி பாம்பன் மீன்வளத்துறை ஆய்வாளர் கெளதமன் மற்றும் அதிகாரிகளுடன் ரெஜூன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பணி செய்யவிடாமல் தடுத்ததாராம். இதுகுறித்து, மீன்வளத்துறை ஆய்வாளர் கெளதமன் பாம்பன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் விசைப்படகு உரிமையாளர் ரெஜூன் மீது சனிக்கிழமை வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com