ராமநாதபுரத்தில் "தூய்மையே சேவை' கருத்தரங்கம்

ராமநாதபுரம் முகம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிக். பள்ளியில் ஊரக வளர்ச்சி முகமை சார்பில் தூய்மையே சேவை கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் முகம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிக். பள்ளியில் ஊரக வளர்ச்சி முகமை சார்பில் தூய்மையே சேவை கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மத்திய, மாநில அரசுகள் மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த நாளையொட்டி செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை தூய்மையே சேவை இயக்கம் நடை
பெற்று வருகிறது.  
அதன்படி, ராமநாதபுரம் முகம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தூய்மையே சேவை என்ற தலைப்பில் திட்ட மாதிரி சமர்ப்பிக்கும் மாவட்ட அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.  கருத்தரங்கிற்கு மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தலைமை வகித்தார். இதில், மாவட்டம் முழுவதும் இருந்து பல்வேறு கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு சுற்றுப்புறச் சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை தொடர்பான திட்டங்களை பற்றி விளக்கி கூறினர். இதற்கான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் பரிசுகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கெட்ஸி.லீமா அமாலினி, உதவி இயக்குநர் (ஊராட்சி) ஆ.செல்லத்துரை உள்பட அரசு அலுவலர்கள், பல்வேறு கல்லூரி மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com