ராமநாதபுரம்

குடிநீர் கோரிக்கைகளுக்கு 3 நாள்களில் தீர்வு: ஆட்சியர் உத்தரவு

DIN

ஒரு கிராமத்திலிருந்து குடிநீர் வரவில்லையென புகார் வந்ததுமே 3 நாள்களுக்குள் அதை சரி செய்து விட வேண்டும் என திங்கள்கிழமை நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவுக்கு உள்பட குணங்குளம் மற்றும் மருதூர் கிராம மக்கள் தங்கள் கிராமத்துக்கு கடந்த 6 மாதமாக காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்திலிருந்து வழங்கப்படும் குடிநீர் வரவில்லை என்றும், ஒரு குடம் குடிநீர் ரூ.10-க்கு வாங்குவதாகவும் கூறி, தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் ஆட்சியரிடம் புகார் செய்ய வந்திருந்த அக்கிராம மக்கள் குடும்ப அட்டையை உயர்த்தி காண்பித்தனர். இதே போல  திருப்புல்லாணி  அருகே  குதக்கோட்டை ஊராட்சிக்கு  உள்பட்ட  வள்ளி மாடன் வலசை கிராமத்து மக்களும், திருவாடானை தாலுகா கற்காத்தகுடி ஊராட்சிக்கு  உள்பட்ட தோட்டாமங்கலம் கிராமத்து மக்களும் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் தங்களுக்கு  சில மாதங்களாக குடிநீர் வரவில்லை எனவும் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கிராம மக்கள் திரண்டு வந்து ஆட்சியரை நேரில் சந்தித்து புகார் செய்தனர்.
இப்புகார்களைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் அதிகாரிகளிடம் கூறியது:
குடிநீர் இல்லை என்று தொடர்ந்து புகார்கள்  வந்து  கொண்டே இருக்கின்றன. குடிநீர்  தொடர்பாக  எந்தப் புகார்களும் வராமல் அதிகாரிகள் பார்த்துக் கொள்ள  வேண்டும். ஒரு கிராமத்திலிருந்து குடிநீர் வரவில்லையென புகார் வந்ததுமே 3 நாள்களுக்குள் அதை சரி செய்து விட வேண்டும். சரி செய்த விபரத்தை அக்கிராம மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். 2 ஆவது முறையாக புகார் வந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது  துறைரீதியாக  நடவடிக்கை  எடுக்கப்படும். அதே  புகார் 3 ஆவது  முறையாக வந்தால்  சம்பந்தப்பட்ட  அதிகாரி பணியிடை  நீக்கம்  செய்யப்படுவது  உறுதி. 
இதே போல பள்ளிகளில் மாணவ, மாணவியர்களுக்கு போதுமான குடிநீர் ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர்கள் செய்து கொடுக்க வேண்டும். மாணவர்கள் குடிநீர் கிடைக்கவில்லை என்று புகார் செய்தால் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்களும், முதன்மைக் கல்வி அதிகாரியுமே பொறுப்பாவார்கள். அங்கன்வாடி மையங்களை நடத்துபவர்களும்  சம்பந்தப்பட்ட மையங்களில் குடிநீர் இல்லை என்று புகார் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
மேலும் கூட்டத்துக்கு அரசு நலத்திட்ட உதவிகள் பெற வந்திருந்த பயனாளிகள் சிலரிடம் பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்ககூடாது எனக் கூறி, அவர்களுக்கு துணிப்பைகளை கொடுத்து இவற்றையே பயன்படுத்துமாறும் ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் முதியவா் உயிரிழப்பு

திருவள்ளூா்: 14 வேட்புமனுக்கள் ஏற்பு, 19 நிராகரிப்பு

தேமுதிக வேட்பாளா் அறிமுக கூட்டம்

உடலில் அலகு குத்தி அம்மன் வீதியுலா சென்ற பக்தா்கள்

முருகன் கோயில் உண்டியல் வசூல் ரூ. 1.05 கோடி

SCROLL FOR NEXT