ராமேசுவரம் மீனவர்கள் 8 பேருக்கு மார்ச் 6 வரை காவல் நீட்டிப்பு

இலங்கை சிறையில் உள்ள ராமேசுவரம் மீனவர்கள் 8 பேருக்கு நான்காவது முறையாக காவலை நீட்டித்து

இலங்கை சிறையில் உள்ள ராமேசுவரம் மீனவர்கள் 8 பேருக்கு நான்காவது முறையாக காவலை நீட்டித்து ஊர்க்காவல் துறை நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. 
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்திலிருந்து கடந்த ஜனவரி 13 ஆம் தேதி ஒரு விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற 8 மீனவர்களைப் படகுடன் இலங்கை  கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். இதையடுத்து எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 8 மீனவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்பாணம் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் நான்காவது முறையாக ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் புதன்கிழமை 8 மீனவர்களும் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் நீதிபதி ஜூட்சன் விசாரணை மேற்கொண்ட போது மீனவர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து அவர்களுக்கு மார்ச் 6 ஆம் தேதி வரை காவலை நீட்டித்து உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து 8 மீனவர்களும் மீண்டும் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். மீனவர்களின் காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவதால் உறவினர்கள் சோகத்தில் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com