தமிழகத்தில் மத்திய அரசு செயல்படுத்திய திட்டங்கள்: அமித்ஷா வெளியிட்ட பட்டியல்

மத்திய பாஜக அரசு சார்பில் தமிழகத்தில் செயல்படுத்திய திட்டங்கள் குறித்த பட்டியலை

மத்திய பாஜக அரசு சார்பில் தமிழகத்தில் செயல்படுத்திய திட்டங்கள் குறித்த பட்டியலை ராமநாதபுரத்தில் வெள்ளிக்கிழமை நடந்த அக்கட்சியின் முகவர்களுக்கான கூட்டத்தில் அதன் தேசியத் தலைவர் அமித்ஷா கூறினார். 
 நாகப்பட்டினம், தஞ்சை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்களவைத் தொகுதி வாக்குச்சாவடி பாஜக முகவர்களுக்கான கூட்டத்தில் வெள்ளிக்கிழமை பங்கேற்று அவர் பேசிய போது பட்டியலிட்ட திட்டங்களின் விவரம்: மதுரையில் எய்ம்ஸ் கிளைக்கு 
ரூ.1,246 கோடியும், ஜவுளித்துறைக்கு ரூ.1,200 கோடியும், சென்னை மெட்ரோ ரயில் சேவை பணிக்கு ரூ.2,875  கோடியும், மோனோ ரயில் திட்டத்துக்கு ரூ.3,267 கோடியும் மத்திய அரசு அளித்துள்ளது.
 தமிழகத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வகிக்கும் துறையிலிருந்து தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்துக்கு ரூ.23,116 கோடியும், ரயில்வே துறைக்கு ரூ.20 ஆயிரம் கோடியும், வர்தா புயல், வறட்சிக்காக ரூ.2 ஆயிரம் கோடியும் அளிக்கப்பட்டுள்ளது.  பிரதமர் வீடு கட்டும் திட்டத்துக்கு ரூ.3,600 கோடி, பொலிவுறு நகர்த்திட்டத்துக்கு ரூ.1,700 கோடி, அம்ரூத் திட்டத்துக்கு ரூ.4,757கோடி, மாநில நெடுஞ்சாலை மேம்பாட்டுக்கு ரூ.23,705 கோடி, பாரத மாதா திட்டத்துக்கு ரூ.14 ஆயிரம் கோடி, துறைமுக மேம்பாட்டுக்காக ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கோடி மற்றும் ராமநாதபுரம் பகுதி துறைமுகத் திட்டங்களுக்கு ரூ.28 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த நிதி நிலை அறிக்கையில் 15 கோடி சிறு, குறு விவசாயிகள் பயன் பெறும்  வகையில் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் பெறும் வகையில் ரூ.17 ஆயிரம் கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. 
    வருமான  வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.2.50 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்களில் ரூ.40 லட்சம்  வரை வர்த்தக பரிமாற்றம் உள்ளவற்றுக்கு ஜிஎஸ்டி பதிவு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.   அதேபோல ரூ.60 லட்சம் வர்த்தக நிறுவனத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீனவர்கள் பயன் பெறும் வகையில் மத்திய  மீனவர் நலத்துறையும், நாடோடி மக்களுக்காக தனிநல வாரியமும் அறிவிக்கப்பட்டுள்ளது. முறைசாரா தொழிலாளர்  பயன் பெறும் வகையில் மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலாசீதாராமன் பாதுகாப்புத்துறை அமைச்சராகியிருப்பது பெருமைக்குரியது. அவரது துறைக்கு இதுவரை இல்லாத வகையில் ரூ.3 லட்சம் கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது. என்றார்.
   நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் பி.டி.அரசகுமார், கருப்பு முருகானந்தம், குப்புராம், நாகராஜன், கேசவவிநாயகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவுக்கு மலர்கிரீடம், ஆளுயர மாலைகள் அணிவிக்கப்பட்டன. வெள்ளி வேல், வெண் சங்குகள் பரிசளிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com