திருவாடானையில் களைகட்டிய ஆட்டுச் சந்தை: விவசாயிகள் மகிழ்ச்சி

திருவாடானையில் மிகவும் பழமை வாய்ந்த ஆடுகள் சந்தையில் பொங்கல் தினத்தை முன்னிட்டு ரூபாய் பல லட்சம்

திருவாடானையில் மிகவும் பழமை வாய்ந்த ஆடுகள் சந்தையில் பொங்கல் தினத்தை முன்னிட்டு ரூபாய் பல லட்சம் மதிப்புள்ள  ஆடுகள் விற்பனை நடந்துள்ளது.இதனால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருவாடானை பகுதி சுற்றுவட்டாரத்தில் விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மாற்றுத் தொழிலாக கோழி, ஆடு, மாடு வளர்ப்பது போன்ற கால்நடைகள் வளர்ப்பதில் விவசாயக் கூலிகள் ஈடுபட்டு வருகின்றனர். 
  விவசாயிகள் பெரும்பாலும் ஆடுகளைத் திருவிழாக் காலங்களில் விற்பனை செய்வது வழக்கம். இதற்காக திருவாடானையில் வாரம் தோறும் திங்கள்கிழமை  ஆடுகள் சந்தை நடைபெறும். இங்கு ஆடுகளை  சுற்றுவட்டார கிராமங்கள் மற்றும் சிவகங்கை மாவட்ட பகுதிகளில் இருந்து கொண்டு வந்து விற்பனை செய்வர். 
  பொங்கல், தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்மஸ் மற்றும் கோயில் விழா காலங்களில் இச்சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடக்கும்.  
கடந்த 3 ஆண்டுகளாக விளைச்சல் இல்லாமல் இருந்து வந்த நிலையில் விவசாயிகளுக்கு ஆடு ,கோழி,மாடு வளர்ப்பு தொழில்கள் கை கொடுத்து வந்தன. 
 இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை மாலை வரை வியாபாரிகள் சந்தைக்கு வந்து பல லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள ஆடுகளை வாங்கிச் சென்றனர். புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரளவு விளைச்சல் கண்டுள்ள நிலையில் பொங்கலை முன்னிட்டு மஞ்சுவிரட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு,எருதுகட்டு, ஜல்லிக்கட்டு எனக் திருவிழாக்கள் நடைபெறுவதால் விருந்தினர்களை அழைத்து கறிவிருந்து கொடுப்பது வழக்கம். 
இதற்காக அப்பகுதிகளைச்சேர்ந்தவர்கள் ஏராளமானோர் ஆடுகள் வாங்க வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆடுகள் விற்பனை அமோகமாக நடந்ததால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com