ராமநாதபுரத்தில் 400 பேருக்கு தாலிக்குத் தங்கம்

ராமநாதபுரத்தில் 400 பேருக்கு தாலிக்குத் தங்கத்தை அமைச்சர் எம்.மணிகண்டன் சனிக்கிழமை வழங்கினார்.

ராமநாதபுரத்தில் 400 பேருக்கு தாலிக்குத் தங்கத்தை அமைச்சர் எம்.மணிகண்டன் சனிக்கிழமை வழங்கினார்.
 ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் தலைமை வகித்தார். இதில், 400 பேருக்கு தாலிக்குத் தங்கம், அம்மா இரு சக்கர வாகனத் திட்டப் பயனாளிகளுக்கு இரு சக்கர வாகனங்களையும் அமைச்சர் எம்.மணிகண்டன்  வழங்கினார். 
 நிகழ்ச்சியில் அவர் பேசியது: ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை 22 ஆயிரத்து 902 பெண்களுக்கு தாலிக்குத் தங்கம் வழங்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு 4 கிராம் தங்கம் என்ற அடிப்படையில் ரூ.96.70 கோடி மதிப்பில் தாலிக்குத் தங்கம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2018 டிசம்பர் வரை 4,300 பேருக்கு 8 கிராம் தாலிக்குத் தங்கம் எனும் அடிப்படையில் ரூ.16.70 கோடி மதிப்பில் தங்கம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.   நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
 பெண்கள் காத்திருந்து அவதி: நிகழ்ச்சி பகல் 12 மணிக்கு ஆரம்பிக்கும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பயனாளிகளான பெண்கள் குழந்தைகளுடன் காலை 10 மணிக்கே நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு வந்துவிட்டனர். ஆனால், திடீரென நிகழ்ச்சி பகல் 1.45 மணி என மாற்றி அறிவிக்கப்பட்டது. அதன்பின்னரும் 2.30 மணிக்கே நிகழ்ச்சி நடைபெற்றது. தாமதமாக நிகழ்ச்சி நடந்ததால் பெண்களும், குழந்தைகளும் காத்திருந்து அவதியுற்றதாக தெரிவித்தனர். 
 மீனவர் குடும்பத்துக்கு நிதியுதவி: இலங்கை கடற்படை விரட்டியதில் கடலில் மூழ்கி உயிரிழந்த ராமநாதபுரம் மாவட்டம் இலந்தைக்கூட்டத்தைச் சேர்ந்த மீனவர் க.முனியசாமி குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ.5லட்சம் நிதியுதவி அளித்திருந்தது. சனிக்கிழமை இலந்தைக்கூட்டம் சென்ற அமைச்சர் எம்.மணிகண்டன் மீனவர் முனியசாமி குடும்பத்தினரிடம் நிதியுதவிக்கான காசோலையை வழங்கினார். ஆட்சியர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com