2 ஆண்டுகளாகியும் முழுமை பெறாத சாலைப் பணி: 5 கிராம மக்கள் அவதி

கமுதி அருகே 2 ஆண்டுகளாகியும் சாலை அமைக்கும் பணிகள் முழுமை பெறாததால், 5 கிராம மக்கள் அவதியடைந்து வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.  

கமுதி அருகே 2 ஆண்டுகளாகியும் சாலை அமைக்கும் பணிகள் முழுமை பெறாததால், 5 கிராம மக்கள் அவதியடைந்து வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.  
கமுதி அருகே புதுக்கோட்டையிலிருந்து குண்டுகுளத்துக்குச் செல்லும் சாலை சேதமடைந்ததால், பிரதமரின் கிராம சாலைகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் 4.600 கிமீ. தொலைவு கொண்ட சாலை ரூ. 2 கோடியே 68 லட்சத்து 3 ஆயிரம் மதிப்பீட்டில் 
கடந்த 2017 இல் பணிகள் தொடங்கப்பட்டன. 
தற்போது, பாலம் அமைக்கும் பணி முடிவடைந்தும், சாலையோரம் ஜல்லிகள் குவிக்கப்பட்டுள்ள நிலையில், சாலைப் பணிகள் முழுமை பெறுவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால், புதுக்கோட்டையிலுலிருந்து குண்டுகுளம், வண்ணாங்குளம், வேப்பங்குளம், கரிசல்புளி, பெருநாழி உள்ளிட்ட ஊர்களுக்கு இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்களில் செல்ல முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். 
எனவே, இச்சாலையை விரைவில் பயன்பாட்டுக்குக் கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com