ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 13,030 மெட்ரிக் டன் "அம்மா' சிமென்ட் விற்பனை: ஆட்சியர் தகவல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இதுவரை 13,030.85 மெட்ரிக் டன் அம்மா சிமென்ட்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இதுவரை 13,030.85 மெட்ரிக் டன் அம்மா சிமென்ட் விற்பனை செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ் தெரிவித்துள்ளார்.
 இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 
ராமநாதபுரம் மாவட்டத்தில் அம்மா சிமென்ட் திட்டம்  கடந்த 2015 ஜனவரி 14 ஆம் தேதி தொடங்கப்பட்டது. அதன்படி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் ராமநாதபுரம், ராமேசுவரம், கடலாடி, திருவாடானை, கமுதி, முதுகுளத்தூர், கீழக்கரை மற்றும் பரமக்குடி ஆகிய 8 இடங்களிலும் சிமென்ட் விற்பனை நடந்தது. 
மேலும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் வாயிலாக மண்டபம், போகலூர், திருப்புல்லாணி, ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் நயினார்கோவில் ஆகிய 5 இடங்கள் என மொத்தம் 13 இடங்களில் அம்மா சிமென்ட் விற்பனை நடைபெற்றது. 
அதனடிப்படையில்   ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகள் வரை 13,030.85 மெட்ரிக் டன் அளவுக்கு சிமென்ட் விற்பனை செய்யப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com