ராமநாதபுரம்

கமுதி அருகே இருதரப்பினரிடையே மீண்டும் மோதல்

DIN

கமுதி அருகே புதன்கிழமை இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து வியாழக்கிழமை மீண்டும் ஒரு தரப்பினர் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டதால் போலீஸார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.
கமுதி அருகே பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெள்ளையாபுரத்தில் முளைப்பாரி ஊர்வலமும், அருகேயுள்ள சிங்கபுலியாபட்டியில் அக்னிச்சட்டி ஊர்வலமும்  நடைபெற்றது. அப்போது இருகிராமத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 2 காவல் உதவி ஆய்வாளர்கள் காயமடைந்தனர். 
இந்நிலையில் வியாழக்கிழமை மதியம் வெள்ளையாபுரத்தைச் சேர்ந்தவர்கள் சிங்கபுலியாபட்டி கிராம மக்கள் மீது கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனராம். தகவலறிந்து வந்த காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் ராஜேஷ் (முதுகுளத்தூர்), சங்கர் (பரமக்குடி), சண்முகசுந்தரம் (கமுதி) ஆகியோர் வெள்ளையாபுரம் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில் உடன்பாடு ஏற்படாததால் போலீஸார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தார்.இதையடுத்து ராமநாதபுரம் காவல் துறை துணைத் தலைவர் காமினி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ்மீனா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று, இருகிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும் இருகிராம மக்களிடம் மோதல் போக்கு அதிகரித்ததால், சம்பவ இடத்தை தென்மண்டல ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன் ஆய்வு செய்து, போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் புதன்கிழமை இரு உதவி ஆய்வாளர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக இருதரப்பிலும் பெயர் தெரிந்த தலா 8 பேர் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் மீது கமுதி போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆலங்குளம் அருகே விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

கடையநல்லூரில் துணை ராணுவப் படை அணிவகுப்பு

ஊதிய உயா்வு ஒப்பந்த அமல் கோரி விசைத்தறியாளா்கள் வேலைநிறுத்தம்

ஆலங்குளம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

கிராமப்புற கண்டுபிடிப்புகளை மேம்படுத்த புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT