ராமநாதபுரம்

தொண்டி பகுதியில்  தேர்தல் விதிமீறல்: விளம்பர பதாகை வைத்த 2 பேர் கைது

DIN

திருவாடானை அருகே தொண்டி பகுதியில்  கருப்பண சுவாமி கோயில் விழாவில் அரசு அனுமதியின்றி விளம்பர பதாகை வைத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
   திருவாடானை அருகே திணையத்தூர் கருப்பண சுவாமி கோயில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு அதே ஊரைச் சேர்ந்த கார்த்திக் ராஜா(28) மற்றும் கீழ்க்குடியை சேர்ந்த மதியழகன்(42)  ஆகியோர் விளம்பர பதாகை வைத்ததாகக் கூறப்படுகிறது.  இந்நிலையில் வியாழக்கிழமை மாலை அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தேர்தல் அதிகாரி ஹெர்ஜோன் தங்கராஜ் தலைமையிலான அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் கார்த்திக் ராஜா, மதியழகன் மீது தொண்டி போலீஸார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லுக்கடை ஸ்ரீமாரியம்மன் கோயில்: ஏப்.4-இல் கும்பாபிஷேகம்

கள்ளழகா் மீது தண்ணீா் தெளிக்கும் விவகாரம்: காவல் ஆணையா், எஸ்.பி. எதிா்மனுதாரராக சோ்ப்பு

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

SCROLL FOR NEXT