மக்களவைத் தேர்தல்:  நாட்டு நலப்பணித் திட்ட முகாமுக்கு அனுமதி மறுப்பு

மக்களவைத் தேர்தல் காரணமாக நாட்டு நலப்பணித் திட்ட முகாமை கிராமத்தில் நடத்த கமுதி காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.

மக்களவைத் தேர்தல் காரணமாக நாட்டு நலப்பணித் திட்ட முகாமை கிராமத்தில் நடத்த கமுதி காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.
கமுதி தேவர் நினைவு கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட முகாம்  பசும்பொன்னில் மார்ச் 19 இல் தொடங்கியது. ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், இம்முகாமை நடத்த கமுதி காவல்துறையினர் தடை விதித்தனர். இதனால், அக் கல்லூரி வளாகத்தில் மார்ச்19 முதல் வெள்ளிக்கிழமை வரை முகாமை நடத்தினர். 
இம் முகாம் கல்லூரி முதல்வர் அருணாச்சலம் தலைமையிலும், அழகப்பா பல்கலை நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் முன்னிலையிலும் நடந்தது. பேராசிரியர்  தங்கமுத்து வரவேற்றார். இதில் பேராசிரியர்கள் ஜெயக்காளை, ஜெயக்கொடி, ராஜாராமன், மாமல்லன், பற்குணம்,  இளவரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  ஏற்பாடுகளை  நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் சிவராமகிருஷ்ணன், தங்கமுத்து, பால்பாண்டி ஆகியோர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com