ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படும்: பாஜக வேட்பாளர் உறுதி

DIN


ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் வசதி, சாலை மற்றும் மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முற்றிலும் பூர்த்தி செய்யப்படும் என ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உறுதியளித்தார். 
 ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின் தொகுதிக்கு சனிக்கிழமை வந்த அவருக்கு மாவட்ட எல்கையான மருச்சுக்கட்டியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில துணைச் செயலாளர் து.குப்புராமு தலைமையில் கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து அதிமுக சார்பில் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் எம்.மணிகண்டன், மாவட்டச் செயலாளர் எம்.ஏ.முனியசாமி, பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் என்.சதர்ன்பிரபாகர் உள்ளிட்டோர் சால்வை அணிவித்து வரவேற்றனர். பின்னர் தேமுதிக மாவட்டச் செயலாளர் சிங்கை சின்னா தலைமையிலும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.வி.ஆர்.ராம்பிரபு தலைமையிலும், பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள், புதிய தமிழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள் வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளித்தனர். வரவேற்பின்போது 500-க்கும் மேற்பட்ட வாகனங்களில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர். 
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியது: ராமநாதபுரம் தொகுதி மக்களின் அடிப்படைத் தேவையான குடிநீர் வசதி, கிராமங்கள் தோறும் சாலை வசதி மற்றும் அரசு மருத்துவமனைகளில் முழு நேர மருத்துவர்களை நியமித்து முழுமையான மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பேன் என உறுதியளித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT