காரைக்குடியில் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள்,  ஊழியர்கள் கூட்டமைப்பு பேரணி

பி.எஸ்.என்.எல். காரைக்குடி தொலைத்தொடர்பு மாவட்ட அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் ப

பி.எஸ்.என்.எல். காரைக்குடி தொலைத்தொடர்பு மாவட்ட அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை பேரணி நடைபெற்றது.
இப்பேரணியை காரைக்குடி தேவர் சிலை முன்பிருந்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக காரைக்குடி மண்டல சிஐடியு  சம்மேளனதுணைச் செயலர் எல்.சிவக்குமார் பேரணியைத் தொடக்கி வைத்துப் பேசினார்.
 பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 4 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யவேண்டும். 2017 -ஆம் ஆண்டுமுதல் ஊதிய மாற்றம், ஓய்வூதிய மாற்றம் செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இப்பேரணி ராஜீவ்காந்தி சிலை அருகே நிறைவுற்றது.
 சங்கங்களின் கூட்டமைப்புச் சேர்ந்த மாவட்டச் செயலர்கள் எம்.பூமிநாதன், ஏ.பாண்டி யன், பி.யுவராஜ்,வி.மாரி ஆகியோர் பேசினர். அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலர் சிவாஜிகாந்தி, கலை இலக்கிய பெருமன்ற வழக்குரைஞர் மணிபாரதி ஆகியோர் சிறப்புரையாற்றினர். காரைக்குடித் தொழில் வணிகக் கழகத் தலைவர் சாமி.திராவிடமணி நிறைவுரையாற்றினார்.
இதில் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com