ஆதித் திருத்தளிநாதர்  ஆலயத்தில் சங்காபிஷேகம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் ஆதித் திருத்தளிநாதர் ஆலயத்தில் சோமவார திங்கள்கிழமையை முன்னிட்டு சங்காபிஷேக விழா நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் ஆதித் திருத்தளிநாதர் ஆலயத்தில் சோமவார திங்கள்கிழமையை முன்னிட்டு சங்காபிஷேக விழா நடைபெற்றது.
குன்றக்குடி தேவஸ்தானத்துக்குள்பட்ட மிகப் பழமையான இக்கோயிலில் கார்த்திகை முதல் திங்கள்கிழமையையொட்டி, 108 சங்காபிஷேக விழா நடைபெற்று வருகிறது. விழாவில், நெல்லில் சங்குகள் சிவலிங்க வடிவத்தில் அடுக்கப்பட்டு, பால் மற்றும் சந்தனம், குங்குமம் இடப்பட்டு, சுற்றிலும் நெய்தீபம் ஏற்றி சிவாச்சாரியார்களால் சங்குகளுக்கு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது. 
தொடர்ந்து, யாகவேள்வி நடத்தப்பட்டு மூலவரான சிவனுக்கு பால், தயிர், சந்தனம், திருமஞ்சனம், இளநீர், விபூதி, யாகத்தில் வைக்கப்பட்ட புனித கலச நீர் ஆகிய பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் மூலவர் காட்சியளித்தார். 
வேள்வி மற்றும் சிறப்பு பூஜைகளை ரவி, ராம் குருக்கள் மற்றும் சிவாச்சாரியார்கள் நடத்தினர். இவ்விழாவில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு நெய்விளக்கேற்றி வழிபட்டனர். ஏற்பாடுகளை, வெள்ளாளர் உறவின்முறையினர் மற்றும் ஆதித் திருத்தளிநாதர் கோயில் பிரதோஷ விழாக் குழுவினரும் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com