வியாழக்கிழமை 15 நவம்பர் 2018

குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றோர் சான்றிதழ்களை அரசு இ-சேவை மையங்களில் பதிவேற்றம் செய்யலாம்

DIN | Published: 12th September 2018 05:47 AM

குரூப்-4 தேர்வில் தேர்ச்சிப் பெற்ற சிவகங்கை மாவட்டத்தைச்  சேர்ந்தவர்கள் தங்களது அசல் சான்றிதழ்களை  அரசு "இ-சேவை'  மையங்களில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்களின் அசல் சான்றிதழ் சரிபார்க்கும் பணி அரசு "இ-சேவை' மையங்கள் மூலமாக நடைபெற்று வருகிறது. 
இதனால் சான்றிதழ் சரிபார்க்கும் பணிக்காக விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செல்லத் தேவையில்லை. 
அண்மையில் நடைபெற்ற குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்ற சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், செப்டம்பர் 18 ஆம் தேதிக்குள் அந்தந்த பகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம், நகராட்சி அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் செயல்படும் அரசு "இ-சேவை' மையங்களில் தங்களது அசல் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.


 

More from the section

சிவகங்கை மாவட்டத்தில் சட்ட விழிப்புணர்வு பிரசார வாகன சேவைத் தொடக்கம்
காரைக்குடியில் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள்,  ஊழியர்கள் கூட்டமைப்பு பேரணி
சித்தலக்குண்டில் விவசாயிகள் சங்கக் கூட்டம்
சிவகங்கையில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்
கஜா புயல்: அழகப்பா பல்கலைக்கழக கல்லூரிகளில் தேர்வுகள் ஒத்தி வைப்பு