சனிக்கிழமை 17 நவம்பர் 2018

சிவகங்கையில் செப்.16 இல் மாணவ, மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி

DIN | Published: 12th September 2018 05:48 AM

சிவகங்கையில்  செப்டம்பர் 16 ஆம் தேதி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி நடைபெற உள்ளது.    
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் க.பிரபு செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்த நாளை (செப்.15) சிறப்பிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் 17 வயதுக்குள்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சைக்கிள் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம்.  
அந்த வகையில், இந்தாண்டுக்கான போட்டிகள் வரும் செப்டம்பர்16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் நடைபெற உள்ளது. இப்போட்டியில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். 
போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ, மாணவிகள் தாங்கள் பயிலும் பள்ளியின் தலைமை ஆசிரியரிடமிருந்து ஒப்புதல் கடிதம் மற்றும் பிறந்த தேதிக்கான சான்றிதழ் பெற்று வர வேண்டும். போட்டியில் சாதாரண மிதிவண்டிகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். 
பயணப்படி வழங்கப்பட மாட்டாது. இதில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களைப் பெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், முதல் 10 இடங்களைப் பெறும் மாணவ,மாணவிகளுக்கு தகுதிச் சான்றிதழும் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
 

More from the section

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தேர்வுகள் இன்றும் ஒத்திவைப்பு
சிவகங்கை அருகே இருதரப்பினர் மோதல்: 4 பெண்கள் உள்பட 11 பேர் கைது
திருப்பத்தூரில் நவ.20 இல் மின் பயனீட்டாளர் குறை தீர்க்கும் கூட்டம்
பாம்பு கடித்து சிறுவன் சாவு
திருப்புவனம் அருகே கோஷ்டி மோதல்: பெண் உள்பட 5 பேர் காயம்; 5 பேர் மீது வழக்கு