சிவகங்கை

திருப்பத்தூர், முதுகுளத்தூரில் விஸ்வ பிரம்ம ஜயந்தி விழா

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரிலும், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரிலும் திங்கள்கிழமை விஸ்வ பிரம்ம ஜயந்தி விழா நடைபெற்றது.
இவ்விழாவை முன்னிட்டு, காலை 9 மணியளவில் திருப்பத்தூர் தச்சுத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில், ஆதி திருத்தளிநாதர் கோயிலில் இருந்து தச்சுத் தொழிலாளர்கள் பேரணியாகப் புறப்பட்டனர். இப்பேரணியை, தொழிலதிபர் துரை சரவணன் தொடக்கி வைத்தார். பின்னர், இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று சாமன்குளம் அருகிலுள்ள சங்கக் கட்டடத்தை அடைந்தது. அங்கு, விஸ்வகர்மா திருவுருவப் படத்துக்கு சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, ஐவர்ணக் கொடியேற்றப்பட்டது.
பின்னர், தனியார் திருமண மகாலில் நடைபெற்ற கூட்டத்துக்கு, திருப்பத்தூர் தச்சுத் தொழிலாளர் சங்கத் தலைவர் எம்.ஆர்.பழனிக்குமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு விஸ்வகர்மா கைவினைஞர் சங்க மாவட்ட துணைத் தலைவர் இரா. காளிமுத்து முன்னிலை வகித்தார். முன்னதாக, ஆர். கண்ணன் வரவேற்றார்.
இதில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட திருப்பத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஆர். பெரியகருப்பன், தச்சுத் தொழிலாளர்களின் சிறப்புகள் குறித்து எடுத்துரைத்தார்.
கூட்டத்தில், மாவட்டத் தலைவர் பி.எஸ். தெய்வசிகாமணி, மாவட்டச் செயலர் பி. ஞானசுந்தரம், மாவட்டப் பொருளாளர் எம். முத்தராமலிங்க, பி. வீரப்பன், மாநிலத் தலைவர் எம். ஜம்புகேஸ்வரன் ஆகியோர் பேசினர். விழாவில், நகைத் தொழிலாளர் சங்கத் தலைவர் பி.ஆர். வடிவேல், ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் விஸ்வகர்மா இளைஞர் பேரவையினர் கலந்துகொண்டனர். சங்க தணிக்கையாளர் எம். சண்முகம் நன்றி கூறினார்.
முதுகுளத்தூர்: விஸ்வகர்மா ஐந்தொழிலாளர்கள் இளைஞர் சங்கம் சார்பில் 14 ஆம் ஆண்டு விஸ்வகர்மா ஜயந்தி விழா நடைபெற்றது. விஸ்வகர்மா ஐக்கிய சங்கத் தவைலர் நல்லாசிரியர் பாலகுருசாமி தலைமை வகித்தார். விழாவில், சுந்தர விநாயகருக்கு கணபதி ஹோமம், விஸ்வகர்மா உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடத்தப்பட்டன.
பின்னர், கோயிலில் இருந்து பேருந்து நிலையம், முருகன் கோயில் வழியாக உற்சவமூர்த்தியை திருவீதி உலாவாக எடுத்து வந்தனர். மாலையில் 108 திருவிளக்கு பூஜையும், பொது அன்னதானமும் நடைபெற்றது. 
விழாவுக்கான ஏற்பாடுகளை, விஸ்வகர்மா ஐந்தொழிலாளர்கள் இளைஞர் சங்கத்தினர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

மின் கணக்கீட்டை மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய செயல் முறை பயிற்சி

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

SCROLL FOR NEXT