தேவகோட்டை பள்ளியில் ராமகிருஷ்ண ஜயந்தி விழா

தேவகோட்டை ராமகிருஷ்ண வித்யாலயம் நடுநிலைப் பள்ளியில், ராமகிருஷ்ணரின் 184 ஆவது ஜயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தேவகோட்டை ராமகிருஷ்ண வித்யாலயம் நடுநிலைப் பள்ளியில், ராமகிருஷ்ணரின் 184 ஆவது ஜயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
      ஸரிமத் சுவாமி ஆத்மானந்தா மஹராஜ் தலைமையில் நடைபெற்ற  இந்த விழாவில், காலையில்  மங்கள இசை, வேத பாராயணம், விஷ்ணு சகஸ்ரநாமம், அபிராமி அந்தாதி, திருமுறை பாராயணம், பஜனை மற்றும் ஆராதனை நடைபெற்றது.
இரவில், பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. தேவகோட்டை  வட்டாரக் கல்வி அலுவலர் லெட்சுமி தேவி சிறப்புறையாற்றினார், சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினர் பி.ஆர். செந்தில்நாதன் வாழ்த்துரை வழங்கினார். இதில், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு, மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மருத்துவர் ஆர்.எம். கிருஷ்ணன் பரிசுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில், தேவகோட்டை ஜமீன்தார் ஏ.எல்.ஏ.ஆர். நாராயணன் செட்டியார் முன்னிலை வகித்தார். முன்னதாக, பள்ளித் தலைமையாசிரியர் இலக்கியமேகம்  சீனிவாசன் வரவேற்றார். பள்ளித் தாளாளர் கிருஷ்ணவேணி கலந்துகொண்டார். ஆசிரியை ஹேமலதா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com