"சைல்டுலைன் 1098'  விழிப்புணர்வு நிகழ்ச்சி

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் அதன் சமூகப் பணித்துறை மற்றும் சிவகங்கை "சைல்டு லைன் 1098'

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் அதன் சமூகப் பணித்துறை மற்றும் சிவகங்கை "சைல்டு லைன் 1098' ஆகியன சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் துணைவேந்தர் நா. ராஜேந்திரன் தலைமை வகித்துப்பேசுகையில், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் 900 கிராமங்களை அழகப்பா பல்கலைக்கழகம் சார்பில் தத்தெடுத்து அதனுடைய மேம்பாட்டிற்காக பணியாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக இந்த ஆண்டு 87 கிராமங்களில் திறந்தவெளி மலம் கழிப்பதை ஒழித்தல், அரசுப்பள்ளிகளில் கழிப்பறைகளை பராமரித்தல், விளையாட்டுத்துறையில் பள்ளி மாணவர்களை மேம்படுத்துதல் ஆகிய பணிகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்றார். நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி டி.பி. வடிவேலு குழந்தை கள் நலனுக்கான சட்ட அமைப்பின் பணிகளைப்பற்றி விளக்கிப் பேசினார். 
 காரைக்குடி குழந்தைகள் நலக்குழுத்தலைவர் ஏ. ராமநாதன், சிவகங்கை லைல்டுலைன் 1098 -ன் இயக்குநர் ஏ. ஜீவானந்தம். சிவகங்கை குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் முத்து ஆகியோர் பேசினர். முன்னதாக பல்கலைக்கழக கலைப்புல முதன்மையர் கே.ஆர். முருகன் வரவற்றுப்பேசினார். முடிவில் சைல்டுலைன் 1098-ன் ஒருங்கிணைப்பாளர் மு. முத்துக்கண்ணு நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com