கண்டுப்பட்டியில் நாளை மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம் கண்டுபட்டியில் உள்ள அந்தோணியார் தேவாலாயத்தில் மத நல்லிணக்க விழாவாக

சிவகங்கை மாவட்டம் கண்டுபட்டியில் உள்ள அந்தோணியார் தேவாலாயத்தில் மத நல்லிணக்க விழாவாக  பொங்கல் விழா மற்றும் மஞ்சுவிரட்டு  சனிக்கிழமை  (ஜன.19)  நடைபெற உள்ளது.
நாட்டரசன்கோட்டை அருகே உள்ள கண்டுபட்டி கிராமத்தில் உள்ள அந்தோணியார் தேவாலாயம் அப் பகுதியில் உள்ள பல்வேறு தரப்பு மக்களுக்கும்  குல தெய்வமாக விளங்கி வருகிறது. இதையடுத்து, ஆண்டுதோறும் இந்த தேவாலாயத்தில் மத நல்லிணக்க விழாவாக பொங்கல் விழா மற்றும் மஞ்சுவிரட்டு நடத்துவது வழக்கம்.
இதையொட்டி, இந்தாண்டுக்கான பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெற உள்ளது. மேலும் தேவாலாயம் முன்பு உள்ள திடலில் மஞ்சுவிரட்டு நடைபெறும்.
இதில்,150-க்கும் மேற்பட்ட காளைகள் வாடிவாசல் வழியாகவும், 400-க்கும் மேற்பட்ட காளைகள் கட்டுமாடுகளாகவும் அவிழ்த்து விடப்பட உள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com