இளைஞர்கள் கல்வி கற்பதன் மூலம் அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க முடியும்

இன்றைய இளைஞர்கள் கல்வி கற்பதன் மூலம் மட்டுமே அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க முடியும்


இன்றைய இளைஞர்கள் கல்வி கற்பதன் மூலம் மட்டுமே அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க முடியும் என எழுத்தாளர் சுகி.சிவம் தெரிவித்தார்.
சிவகங்கையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியது: இளைஞர்களை நல்ல முறையில் வழி நடத்துவதற்கு பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் முக்கிய பங்கு உள்ளது. அதை கருத்தில் கொண்டு தங்களது எண்ணம், பிரச்னைகளை தங்கள் பிள்ளைகளிடத்தில் திணிக்க வேண்டாம். மாறாக அவர்களுக்கு பிரச்னையிலிருந்து விடுபடுவதற்கான மார்க்கத்தை தெளிவாக்க வேண்டும். பெற்றோர், ஆசிரியர், மாணவர் ஆகியோரிடம் உடலில் உறுதியும், தூய்மையான உள்ளமும், அர்ப்பணிப்பு உணர்வும் காணப்பட்டால் கல்வி நிலை என்பது முழுமை பெறும். அவ்வாறான ஒரு நிலை இன்றைக்கு மிக அவசியமாகிறது. வளர்ந்து வரும் போட்டி உலகில் பல்வேறு பிரச்னைகளை கடந்து இன்றைய இளைஞர்கள் கல்வி கற்பதன் மூலம் மட்டுமே அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க முடியும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com