சிவகங்கை

திருப்பத்தூர், சாயல்குடி பகுதிகளில் சோதனை: ரூ.2 லட்சம் பறிமுதல்: அமமுக பிரமுகரிடம் ரூ.40 ஆயிரம் சிக்கியது

DIN

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே வெள்ளிக்கிழமை நடத்திய சோதனையில் அமமுக நிர்வாகியிடம் இருந்து ரூ.40ஆயிரம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி, கமுதி பகுதிகளில் நடத்திய வாகனச் சோதனையில் ரூ.1.66 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
சிங்கம்புணரி அருகே உலகம்பட்டியில் வெள்ளிக்கிழமை அமமுக சார்பில் ஊழியர் கூட்டம் நடைபெற்றது. இதில் பணப்பட்டுவாடா நடப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு வந்த தகவலையடுத்து அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அக்கட்சியின் ஒன்றியத் துணைச் செயலாளர் முத்துச்சாமி என்பவரிடம் ரூ.40 ஆயிரம் இருந்தது தெரிய வந்தது. விவசாயப் பணிகளுக்காக அப்பணத்தை வைத்திருந்ததாக அவர் தெரிவித்தார். ஆனால் அதற்குரிய ஆவணங்கள் இல்லாததையடுத்து பணத்தை பறிமுதல் செய்து திருப்பத்தூர் கருவூலத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.  
வெள்ளி வியாபாரியிடம் சோதனை: திருப்பத்தூர் தபால் அலுவலகச் சாலையில் உள்ள தனியார் விடுதியில் வெள்ளிப் பொருள்களுடன் ஒருவர் தங்கியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது. இதையடுத்து அவ்விடுதியில் திருக்கோஷ்டியூர் காவல் ஆய்வாளர் மலையரசி தலைமையில் போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு  சோதனை நடத்தினர். இதில் விடுதியில் தங்கியிருந்தவர் வைத்திருந்த பெட்டியில் ரூ .8 லட்சம் மதிப்புள்ள வெள்ளி நகைகள் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து தேர்தல் பறக்கும் படையினர்  அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் வெள்ளிப் பொருள்கள் விற்பனை செய்யும் வியாபாரி என்பதும், அவற்றுக்கான உரிய ஆவணங்கள் வைத்திருந்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து வெள்ளிப் பொருள்களை அவரிடமே மீண்டும் ஒப்படைத்து விட்டு  அதிகாரிகள் சென்றனர்.   
முதுகுளத்தூர்: ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடிஅருகே புல்லந்தை விலக்கு சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி  அமர்லால் , காவல் சார்பு- ஆய்வாளர் குமரேசன், தலைமை காவலர்கள் கோபால்,முருகன் ஆகிய குழுவினர் வியாழக்கிழமை இரவில் சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். இதில் ஆந்திரத்தைச் சேர்ந்த ரத்தினமையா என்பவர் வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதே போன்று கமுதி கோட்டை மேடு விலக்கு சாலை அருகில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி பழனிக்குமார், சார்பு ஆய்வாளர் செல்லப்பாண்டியன் தலைமை காவலர்கள் லெட்சுமி, முருகன்  ஆகியோர் கொண்ட குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். இதில்  கீழ பெருங்கரையைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரிடமிருந்து  ரூ.62 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். உரிய ஆவணம் சமர்ப்பித்த பின் பணம் திரும்ப வழங்கப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

SCROLL FOR NEXT