தேர்தல் பணி: கர்ப்பிணிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டுகோள்

கர்ப்பிணி பெண் அலுவலர்களுக்கு தேர்தல் பணியிலிருந்து விலக்களிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.


கர்ப்பிணி பெண் அலுவலர்களுக்கு தேர்தல் பணியிலிருந்து விலக்களிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
 அக்கூட்டமைப்பின் மாநிலத் துணைத் தலைவர் ஜோசப்ரோஸ், சிவகங்கை மாவட்டத் தலைவர் தாமஸ்  அமலநாதன், மாவட்டச் செயலர் முத்துப்பாண்டியன் ஆகியோர் கூட்டாக  சிவகங்கை மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஜெ.ஜெயகாந்தனுக்கு வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்: 
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தல் பணியில் தலைமை வாக்குப்பதிவு அலுவலர் முதல் அனைத்து நிலை வாக்குப் பதிவு அலுவலர்களாக பெரும்பாலும் ஆசிரியர்களே பணியாற்ற உள்ளனர். 
இவர்களில் 80 சதவீதத்துக்கு மேல் பெண் ஆசிரியர்கள் என்பதால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள மற்றும் கர்ப்பிணி பெண் ஊழியர்களுக்கு தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். 
தேர்தல் பணியில் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். தேர்தல் பணியிலிருந்து மாநிலத் தேர்தல் ஆணையத்தால் விலக்களிக்க உறுதியளிக்கப்பட்ட கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாயார், கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு அறுவைச் சிகிச்சை செய்து கொண்டோர், மருத்துவ விடுப்பில் உள்ளோர் மற்றும் தேர்தல் பணியாற்ற இயலாத நிலையில் உள்ள ஆசிரியர்களுக்கு குறிப்பாக பெண் ஆசிரியர்களுக்கு தேர்தல் பணியிலிருந்து விலக்களிக்க வேண்டும்.
மேலும் 100 சதவீத வாக்களிப்பை நிறைவு செய்ய தபால் வாக்கினை முறையாக குறிப்பிட்ட கால கெடுவுக்குள் வழங்க வேண்டும். ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தேர்தல் பயிற்சி குறித்த விவரங்களை முன் கூட்டியே தெரிவிக்க வேண்டும்  என அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com