தேனி மாவட்டத்தில் 485 பேர் மழை நிவாரண முகாம்களில் தங்க வைப்பு

தேனி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருவதால்  தாழ்வான பகுதிகளில் வசிக்கும்  485 பேர் வெள்ளிக்கிழமை

தேனி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருவதால்  தாழ்வான பகுதிகளில் வசிக்கும்  485 பேர் வெள்ளிக்கிழமை, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதில், மழை வெள்ளம் சூழும் அபாயம் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள புயல் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
உத்தமபாளையம் பொட்டிப்புரம் பகுதியைச் சேர்ந்த 13 பேர் சமுதாயக் கூடத்திலும், போடி அருகே  பண்ணைத்தோப்பு பகுதியைச் சேர்ந்த 12 பேர் அங்கன்வாடி மையத்திலும், ஜெயமங்கலத்தைச் சேர்ந்த 15 பேர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், பெரியகுளம் தென்கரை பட்டாளம்மன்கோயில் தெருவைச் சேர்ந்த 250 பேர் நகராட்சி திருமண மண்டபத்திலும், உத்தமபாளையம் கன்னிசேர்வைபட்டியைச் சேர்ந்த 7 பேர்  ஊராட்சி ஒன்றிய சேவை மையத்திலும், தேனி ஆற்றங்கரைத் தெரு மற்றும் பழனிசெட்டிபட்டி ஜவஹர் நகர் பகுதியைச் சேர்ந்த 120 பேர் தேனி தனியார் திருமண மண்டபத்திலும், போடி ஒன்றியம் மஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்த 68 பேர் பூதிப்புரம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவு மற்றும் மருத்துவ வசதி செய்து தரப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com