வராகநதியில் வெள்ளப்பெருக்கு துணை முதல்வர் ஆய்வு

கஜாபுயலின் தாக்கத்தால் பெரியகுளம் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகளுக்கு தண்ணீர்

கஜாபுயலின் தாக்கத்தால் பெரியகுளம் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகளுக்கு தண்ணீர் புகுந்தது. அதனை துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பார்வையிட்டார். 
கஜாபுயலையடுத்து வியாழக்கிழமை நள்ளிரவு முதல் பெரியகுளம் பகுதியில் சாரல் மழை பெய்து வந்தது. மேலும் கொடைக்கானல் மலைப்பகுதியில் பலத்த மழை பெய்ததால் பெரியகுளம் அருகேயுள்ள கள்ளாற்றில் நீர்வரத்து அதிகரித்தையடுத்து வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
வெள்ளநீர் வராகநதிக்கரையோரம் உள்ள ஸ்டேட்பேங்க் காலனி மற்றும் பட்டாளம்மன் கோயில் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்தது. 
இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அப்பகுதியில் அருகில் உள்ள மண்டபம் மற்றும் கல்யாணமண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளநீர் புகுந்த பகுதியை துணை முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  வெள்ளநீர் வராதவாறு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ், ஆட்சியர் (பயிற்சி) தினேஷ்குமார், வருவாய் கோட்டாட்சியர் ச.ஜெயப்பிரதீதா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com