நீர் வெளியற்றம் குறைப்பால் லோயர் கேம்ப் மின் உற்பத்தி 42 மெகாவாட் ஆக குறைந்தது

முல்லைப் பெரியாறு அணையில்இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைந்ததால் லோயர்கேம்ப்பில் மின்சார உற்பத்தி  42 மெகா வாட் ஆக குறைந்தது.

முல்லைப் பெரியாறு அணையில்இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைந்ததால் லோயர்கேம்ப்பில் மின்சார உற்பத்தி  42 மெகா வாட் ஆக குறைந்தது.
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து, தலைமதகு வழியாக "போர் பை'அணையிலிருந்து 4 ராட்சத குழாய்கள் மூலம் தலா 400 கன அடி வீதம் 1600 கன அடி தண்ணீர் எடுக்கப்படும். இதன் மூலம் லோயர்கேம்ப்பில் உள்ள நீர் மின் உற்பத்தி நிலையத்திலிருந்து, 4  மின்னாக்கிகள் மூலம் தலா 42 மெகா வாட் மின்சாரம் என 168 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. 
இந்நிலையில், முல்லைப்பெரியாறு அணையில் கடந்த சில நாள்களாக நீர் மட்டம் குறைந்து வருகிறது.இதனால்,கடந்த நவ. 17 முதல் அணையிலிருந்து விநாடிக்கு 450 கன அடி தண்ணீர் மட்டுமே வெளியேற்றப்படுகிறது. 
அணையிலிருந்து குறைந்த அளவே நீர் வெளியேற்றப்படுவதால், லோயர்கேம்ப் நீர் மின் உற்பத்தி நிலையத்தில் மின்சார உற்பத்திஅளவும்குறைந்தது.
கடந்த நவ. 17இல் அணையிலிருந்து வெளியேறும் நீரின் அளவு குறைக்கப்பட்டதால், லோயர்கேம்ப் மின்சார நிலையத்தில் ஒரு மின்னாக்கி மட்டும் தற்போது இயக்கப்பட்டுவருகிறது. அதன் மூலம் 42 மெகா வாட் மின்சாரம் மட்டும் உற்பத்தி செய்யப்படுகிறது. 
இது பற்றி மின்சார உற்பத்தி நிலைய பொறியாளர் ஒருவர் கூறியது: அணையிலிருந்து தண்ணீர் வெளியேறும் அளவை பொறுத்து மின்சார உற்பத்தி நடைபெறும்.வரும் காலங்களில் தண்ணீர் அதிக அளவு வெளியேற்றினால், நீரின் அளவை பொறுத்து மின்னாக்கிகள் இயக்கப்படும் என்றார்.
அணையின் நிலவரம்: செவ்வாய்க்கிழமை நிலவரப்படி முல்லைபெரியாறு அணையில் நீர்மட்டம் 129.10 அடியாக இருந்தது. நீர் இருப்பு 4,504 மில்லியன் கன அடியாக இருந்தது. அணைக்குவிநாடிக்கு 1,720 கன அடி தண்ணீர் வரத்து இருந்தது. விநாடிக்கு 450 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. 
மழை விவரம்: பெரியாறு அணை பகுதியில் - 3.8 மில்லி மீட்டர், தேக்கடி ஏரி பகுதியில் - 1.6 மி.மீ., கூடலூர் - 1. 6 மி.மீ., உத்தமபாளையம் - 6 மி.மீ., மழை பெய்தது. வீரபாண்டியில் மழை இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com