செவ்வாய்க்கிழமை 25 செப்டம்பர் 2018

பெரியகுளம் கல்லூரியில் புத்தகக் கண்காட்சி

DIN | Published: 12th September 2018 05:31 AM

பெரியகுளம்  ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியில் திங்கள், செவ்வாய் ஆகிய 2 நாள்கள் புத்தக கண்காட்சி நடைபெற்றது.
 கல்லூரி முதல்வர் எஸ்.சேசுராணி தலைமை வகித்து, கண்காட்சியைத் தொடக்கி வைத்தார். எழுத்தாளர் அல்லி உதயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நல்ல புத்தகங்கள் , சிறந்த நண்பர்கள் என்ற தலைப்பில் பேசினார். 
கல்லூரி செயலாளர் குயின்சிலி, ஜெயந்தி புத்தகங்களை வாசிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பேசினார்.
 கண்காட்சியில் தேனி, திண்டுக்கல், மதுரை,  சிவகாசி, திருநெல்வேலி மற்றும் சென்னையை சேர்ந்த புத்தக விற்பனையாளர்கள் பங்கேற்றனர். புத்தக வாசிப்பதால் அறிவு வளருமா - ஆளுமை வளருமா என்ற தலைப்பில் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட பட்டிமன்றம் செவ்வாய்க்கிழமை  நடைபெற்றது.
 பட்டிமன்றத்திற்கு விலங்கியல் துறை பேராசிரியர் கேத்தரின் தலைமை வகித்தார். புத்தகம் படித்தால் ஆளுமையும் அறிவும் வளரும் என தீர்ப்பளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் உதவி நூலகர் அற்புத சகாயம் மற்றும் ஆங்கிலத்துறை பேராசிரியர் ப்ரீத்தி மற்றும் நூலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். கல்லூரி நூலகரும் மற்றும் கல்லூரி துணை முதல்வர் பாத்திமா மேரி சில்வியா நன்றி கூறினார். 

More from the section

தேனி மாவட்டத்தில் அடிப்படை வசதியில்லாத  ஆதி திராவிடர் மாணவர் விடுதிகள்
போடியில் வீட்டுக்குள் புகுந்து சமையல் எரிவாயு உருளை திருடியவர் கைது
போடியில் சாக்கடை தூர்வாரும் பணி தொடக்கம்
சின்னமனூர் அருகே மேகமலை அடிவாரத்தில் கொள்ளைபோகும் கனிம வளங்கள்


டம் டம் பாறை பகுதியில் கொலை செய்யப்பட்டவர் கர்நாடக மாநிலத்தவர்