தேனி

கல்லூரி மாணவர்களுக்கு இளைஞர் நாடாளுமன்ற நிகழ்ச்சி

DIN

ஆண்டிபட்டியில் காமராஜர் பல்கலை. கல்லூரியில் என்.எஸ்.எஸ். சார்பில் இளைஞர் பாராளுமன்ற நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு காமராஜர் பல்கலை. கல்லூரி முதல்வர் சுரேஷ் தலைமை வகித்தார். இளைஞர் பாராளுமன்ற நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கதலிநரசிங்கப்பெருமாள் அறிமுகவுரையாற்றினார். என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் பாண்டி,  கணினி பயன்பாட்டியல் துறை திட்ட அலுவலர் மகாலட்சுமி, பொருளாதாரத் துறை திட்ட அலுவலர் ஜெயக்குமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பாலியல் வன்முறை, அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம், அரசின் கல்வி கொள்கை மாற்றம் ஆகிய தலைப்புகளில் நாடாளுமன்ற விவாதம் நடந்தது. இதில் மாதிரி இரங்கல் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. தேனி மேரிமாதா கல்லூரி, நாடார் சரசுவதி கல்லூரி, காமராஜர் பல்கலை. கோட்டூர், ஆண்டிபட்டி உறுப்புக் கல்லூரிகள், வீரபாண்டி கலை அறிவியல் கல்லூரி, பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி, உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

ரத்னம் படத்தின் 2வது பாடல்!

அமர் சிங் சம்கிலா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

கேஜரிவால் கைது: இந்தியாவில் தேர்தல் நியாயமாக, சுதந்திரமாக நடக்கும் என நம்புகிறோம்: ஐ.நா.

திருமால் உருகிப் போற்றிய திருமேற்றளி கோயில்

SCROLL FOR NEXT