தேனி

தேனி மாவட்டத்தில் பட்டாசுக் கடை உரிமம் பெற செப். 28-க்குள் விண்ணப்பிக்கலாம்

DIN

தேனி மாவட்டத்தில் பட்டாசு சில்லரை விற்பனை கடைகளுக்கு தற்காலிக உரிமம் பெற செப்.28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள
அறிவிப்பு: மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி உரிமம் பெற்றுள்ளவர்கள்மட்டுமே பட்டாசுக் கடை வைத்து விற்பனை செய்யலாம். ஏற்கெனவே நிரந்தர உரிமம் பெற்றிருப்பவர்கள், சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியரை தொடர்பு கொண்டு தங்களது உரிமத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனை செய்வதற்கு தற்காலிக உரிமம் பெற, விண்ணப்பப் படிவத்துடன் உரிய ஆவணங்கள், கூர்ந்தாய்வுக் கட்டணம், உரிமக் கட்டணம் செலுத்தியதற்கான விவரம் ஆகியவற்றை இணைத்து செப்.28-ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தீபாவளிக்கு முன்னதாகவே தங்களது விற்பனையை தொடங்குவதற்கு வாய்ப்பாக, வரும் அக். 20-ஆம் தேதிக்குள் உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT