தேனி

சுருளி அருவி பகுதியில் பன்றிகளை அப்புறப்படுத்த கோரிக்கை

DIN

சுருளி அருவி பகுதியில் சாலையில் சுற்றி திரிந்து தொற்று நோய் பரப்பும் பன்றிகளை ஊராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    தேனி மாவட்டம் கம்பம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது சுருளிப்பட்டி ஊராட்சி. இங்கு  சுருளி அருவி உள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். சுருளிப்பட்டி பகுதியில் ஏராளமான பன்றிகள் சுற்றி திரிகின்றன. சாக்கடை மற்றும் திறந்தவெளிக் கழிப்பறை பகுதிகளில் அவை சுற்றி திரிவதால் ஊராட்சி பகுதி மக்களுக்கு தொற்று நோய்களை பரப்பும் அபாயம்  உள்ளது. மேலும் சுருளி அருவிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே சுருளிப்பட்டி ஊராட்சி நிர்வாகமும், வட்டார வளர்ச்சி நிர்வாகமும் பன்றிகளை அப்புறப்படுத்தி தொற்று நோய்கள் வராமல் பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூா் அணை நிலவரம்

சேலத்தில் சிறை அதாலத்

சேலத்திலிருந்து 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சங்ககிரியில் கொமதேக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

காசநோய் விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT