தேனி

பெரியகுளத்தில் தாமரைப்பூ கிழங்குகள் சேகரிப்பில் கிராம மக்கள்

DIN

பெரியகுளம் பகுதியில் மருத்துவ குணமுள்ள தாமரைப்பூ கிழங்குகள் சேமிப்பில் கிராம பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக போதிய மழை இல்லை. இதனால் பெரும்பாலான குளங்கள் மற்றும் கண்மாய்கள் வறண்டு காணப்படுகின்றன. இதில் தாமரைப்பூ கொடிகள் காய்ந்த நிலையில் உள்ளன.  இந்த கொடியின் அடியில் படர்ந்த நிலையில் கிழங்குகள் உள்ளன. இந்த கிழங்குகள் சர்க்கரை நோய் மற்றும் பல்வேறு நோய்களுக்கு பயன்படுவதாக கூறப்படுகிறது.  இதனை இப்பகுதி மக்கள் உணவாகவும் பயன்படுத்தி வருகின்றனர். 
இதனால் தாமரைப்பூ கிழங்கு அனைவரும் வாங்கி செல்கின்றனர். ஒரு கிலோ தாமரைப்பூக் கிழங்கு ரூ. 100- க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பெரியகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புற பெண்கள் கிழங்குகள் சேமிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கள்ளிப்பட்டியை சேர்ந்த ராமாயி கூறியது: போதிய வேலை இல்லை. இதனால் தாமரைப்பூ, நெருஞ்சி முள், கற்றாழை ஆகியவற்றை சேகரித்து விற்பனை செய்து வருகிறோம். இவ்வாறு சேகரிப்பதால் ஒரு நாளைக்கு ரூ. 200 வரை கிடைக்கிறது. தற்போது குளங்கள் வற்றியுள்ளதால் தாமரைப்பூ கிழங்கு கிடைக்கிறது. இதனை வெட்டி எடுத்த விற்பனை செய்து வருகிறோம் என்றார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT