தேனி

போடியில் சாக்கடை தூர்வாரும் பணி தொடக்கம்

DIN

தினமணி செய்தி எதிரொலியாக, போடியில் கழிவுநீர்  கால்வாய்கள் தூர்வாரும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
போடி நகராட்சிப் பகுதியில் காமராசர் சாலை, எஸ்.எஸ்.புரம் உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாராததால், சாக்கடை தேங்கி துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் நிலவியது.
இது குறித்து தினமணி நாளிதழில் செப்டம்பர் 22 ஆம் தேதி செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக, சாக்கடை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் உடனடியாக தூர்வார நகர்நல அலுவலர் பா. ராகவன் உத்தரவிட்டார். அதன்பேரில், சுகாதார ஆய்வாளர்கள் மணிகண்டன், கோபாலகிருஷ்ணன், மேற்பார்வையாளர் ராமர் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை கால்வாய்களை தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர். பொக்லைன் மூலம் கால்வாய்கள் தூர்வாரப்பட்டன. இதில், போடி நகர் காவல் நிலையம் முன்புள்ள கால்வாயில் தூர்வாரும் பணி காலை முதல் மாலை வரை நடைபெற்றது. இதேபோல், போடி எஸ்.எஸ்.புரத்திலும் கால்வாய் தூர்வாரப்பட்டு சுண்ணாம்புத் தூள் தெளிக்கப்பட்டது.
மேலும், பாலங்களுக்கு அடியில் மண் மற்றும் குப்பைகளை அகற்ற நவீன இயந்திரம் பயன்படுத்த உள்ளதாகவும், தொடர்ந்து மற்ற தெருக்களிலும் கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரும் பணி நடைபெறும் என்றும், நகராட்சி சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT