வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தொடக்கம்

தேனி மாவட்டம் வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா, புதன்கிழமை கோயிலில் கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

தேனி மாவட்டம் வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா, புதன்கிழமை கோயிலில் கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
இத்திருவிழாவை முன்னிட்டு கண்ணீஸ்வரமுடையார் கோயில் முல்லைப் பெரியாற்றில் இருந்து கோயிலுக்கு கம்பம் கொண்டு வரப்பட்டது. கோயிலில் கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. கம்பத்திற்கு மஞ்சள் நீர் ஊற்றி பக்தர்கள் வழிபட்டனர். 
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் மே 7 ஆம் தேதி தொடங்கி 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வரும் மே 7 ஆம் தேதி மலர் விமானத்தில் அம்மன் கோயிலுக்கு பவனி வருதல், மே 8 ஆம் தேதி முத்துப் பல்லக்கில் அம்மன் புறப்பாடு, மே 9 ஆம் தேதி புஷ்ப பல்லக்கில் அம்மன் புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும். மே 10 ஆம் தேதி திருத்தேர் வடம் பிடித்தல், மே 13 ஆம் 
தேதி தேர் நிலைக்கு வருதல், முத்துச் சப்பரத்தில் அம்மன் திருத் தேர் தடம் பார்த்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும். மே 14 ஆம் தேதி ஊர் பொங்கல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைகிறது.
கௌமாரிம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு கோயிலில் அங்கப்பிரதட்சணம் செய்வற்கு ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் வரும் மே 5 ஆம் தேதி வரையும், அக்கினிச்சட்டி நேர்த்திக் கடன் செலுத்துவதற்கு வரும் 
மே 7 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரையும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என்று இந்து 
சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com