ஆண்டிபட்டி பகுதியில் தர்பூசணி பழங்கள் விற்பனை அதிகரிப்பு

கோடை காலம் தொடங்க உள்ள நிலையில் ஆண்டிபட்டி பகுதியில் தர்பூசணி விற்பனை அதிகரித்துள்ளது. 

கோடை காலம் தொடங்க உள்ள நிலையில் ஆண்டிபட்டி பகுதியில் தர்பூசணி விற்பனை அதிகரித்துள்ளது. 
இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக தற்போதே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் தற்போது தர்பூசணி விற்பனை தொடங்கியுள்ளது. இதுதவிர உடலை குளிர்ச்சியாக்கும் கம்மங்கூல், மோர் விற்பனையும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதில் ஆண்டிபட்டி முதல் தேனி வரை தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளில் அதிகளவில் இதுபோன்ற சாலையோரக் கடைகள் தொடங்கப்பட்டுள்ளன. தர்பூசணியை பொறுத்த வரையில் கடந்த ஆண்டை விட தற்போது விலை அதிகமாகவே உள்ளது. ஒரு கிலோ தர்பூசணியின்  விலை ரூ.30 முதல் ரூ.40 வரை விற்கப்படுகிறது. விலை அதிகமாக இருந்தாலும் மக்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்ப அவற்றை வாங்கி உண்கின்றனர். மேலும் பழரசம் விற்பனை செய்யும் கடைகளிலும் விற்பனை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com