தேனி

தேனி ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் காவலர்கள் சோதனை

DIN

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை பொதுமக்களை தீவிர சோதனைக்குப் பின் போலீஸார் உள்ளே அனுமதித்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்திற்கு பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆட்சியரிடம் புகார் அளிக்க வரும் பொதுமக்களில் சிலர், தீக்குளித்து தற்கொலைக்கு முயலும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகிறது.இந்நிலையில், கடந்த பிப்.13-ஆம் தேதி தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்திருந்த திருமலாபுரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முனியாண்டி, தனது புகார் மீது காவல் துறை நடத்தி வரும் வழக்கு விசாரணையில் அதிருப்தியடைந்து, தேனி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பயனின்றி பிப்.14-ஆம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுவதை முன்னிட்டு திங்கள்கிழமை போலீஸார் பொதுமக்களிடம் சோதனை நடத்தினர். குறைதீர் கூட்டத்துக்கு மனு அளிக்க வருவோர், அங்கன்வாடி பணிக்கு விண்ணப்பிக்க வருவோர், ஆட்சியர் அலுவலகத்துக்கு பல்வேறு பணி நிமித்தமாக வந்து செல்வோரிடம் உள்ள பைகளை திறந்து பார்த்து போலீஸார் தீவிர சோதனை நடத்தினர். குடிநீர் பாட்டில்களை திறந்து முகர்ந்தும், குடித்துப் பார்த்தும் சோதனையிட்டு ஆட்சியர் அலுவலகத்திற்குள் கொண்டு செல்ல அனுமதித்தனர்.
இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோவில் செல்வோரையும் போலீஸார் நிறுத்தி, சோதனையிட்டு ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதித்ததால் நுழைவு வாயில் பகுதியில் நெரிசல் ஏற்பட்டது. ஆட்சியர் அலுவலக வளாகத்துக்குள் தீக்குளிப்பு முயற்சி சம்பங்களை தடுப்பதற்காக இந்த சோதனை மேற்கொள்ளப்படுவதாக போலீஸார் கூறினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

SCROLL FOR NEXT