ஆண்டிபட்டியில் 14 ஆவது நாளாக விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டம்

ஆண்டிபட்டி பகுதியில் விசைத்தறி நெசவாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் 14 ஆவது நாளாக திங்கள்கிழமையும் தொடர்ந்தது.

ஆண்டிபட்டி பகுதியில் விசைத்தறி நெசவாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் 14 ஆவது நாளாக திங்கள்கிழமையும் தொடர்ந்தது.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள சக்கம்பட்டி விசைத்தறி நெசவாளர்கள் கூலி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜனவரி 1 ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
நெசவாளர்களுக்கு பல்வேறு தொழிற்சங்கங்கள் ஆதரவு அளித்து  வரும் நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தையின்போது எந்தவிதமான முடிவும் எட்டப்படாமல் தோல்வியடைந்தது. அதனால், நெசவாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தினர்.
இந்நிலையில், விசைத்தறி உரிமையாளர்கள், நெசவாளர்கள் இடையேயான பேச்சுவார்த்தை, சக்கம்பட்டி கூட்டுறவு பண்டகசாலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. விசைத்தறி உரிமையாளர்கள் தரப்பில் 15-க்கும் மேற்பட்டோரும், நெசவாளர்கள் தரப்பில் தொழிற்சங்கங்க நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், எந்த முடிவும் எட்டப்படவில்லை. அதையடுத்து, நெசவாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் 14 ஆவது நாளாக திங்கள்கிழமையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்பிரச்னை குறித்த அடுத்தக்கட்டப் பேச்சுவார்த்தை திங்கள்கிழமை மாலை கோட்டாட்சியர் தலைமையில் நடைபெறும் என தெரிவித்திருந்தனர். 
கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக வேலை இல்லாததால், நெசவாளர்கள் கடும் நிதி நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனர். இப்பிரச்னையில், மாவட்ட நிர்வாகம் விரைந்து செயல்பட்டு, சுமூக முடிவை எட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என, நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com