இரண்டாவது இடைத்தேர்தலை சந்திக்கும் ஆண்டிபட்டி தொகுதி

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சட்டப் பேரவை தொகுதியில் கடந்த  2002-ஆம் ஆண்டைத் தொடர்ந்து தற்போது  2-ஆவது முறையாக இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சட்டப் பேரவை தொகுதியில் கடந்த  2002-ஆம் ஆண்டைத் தொடர்ந்து தற்போது  2-ஆவது முறையாக இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
கடந்த 1984-இல் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்தபோது ஆண்டிபட்டி சட்டப் பேரவைத் தொகுதியில், திமுக வேட்பாளர் வல்லரசுவை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 1980-இல் திரைப்பட நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனும், அதையடுத்து கடந்த 1984-இல் எம்.ஜி.ஆரும் போட்டியிட்டதால் இத் தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றது.
கடந்த 2001-இல் நடைபெற்ற சட்டப் பேரவை பொதுத் 
தேர்தலில் ஆண்டிபட்டி, கிருஷ்ணகிரி, புவனகிரி, புதுக்கோட்டை ஆகிய 4  தொகுதிகளுக்கும் ஜெயலலிதா வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தார். 
ஒருவர் இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிடக் கூடாது என்ற விதி உள்ளதால், 
4 இடங்களிலும் அவரது வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்
பட்டன. இதனைத்தொடர்ந்து இத்தேர்தலில் ஆண்டிபட்டி சட்டப் பேரவை தொகுதியில் அதிமுக சார்பில் தங்க.தமிழ்ச்செல்வன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 
ஜெயலலிதா போட்டி: டான்சி மற்றும் கொடைக்கானல் ஹோட்டல் வழக்குகளில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதையடுத்து அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பாக, ஆண்டிபட்டி சட்டப் பேரவை உறுப்பினர் தங்க.தமிழ்ச்செல்வன் தனது பதவியை ராஜிநாமா செய்தார். 
இதையடுத்து, கடந்த 2002-இல் ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற்ற முதல் இடைத்தேர்தலில் போட்டியிட்டு ஜெயலலிதா வெற்றி பெற்றார். தொடர்ந்து கடந்த 2006-இல் நடைபெற்ற சட்டப் பேரவை பொதுத் தேர்தலிலும் ஜெயலலிதா இதே தொகுதியில் திமுக வை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
எம்.எல்.ஏ.,தகுதி நீக்கம்: 
கடந்த 2011-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆண்டிபட்டி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட தங்க.தமிழ்ச்செல்வனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. 
இத்தேர்தலில், திமுக வேட்பாளரான அக்கட்சியின் மாவட்டச் செயலர் எல்.மூக்கையாவை எதிர்த்துப் போட்டியிட்டு 
தங்க.தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றார். கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும்  அதிமுக சார்பில் போட்டியிட்ட தங்க.தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றார்.
இந்த நிலையில், தற்போது ஆண்டிபட்டி சட்டப்பேரவை உறுப்பினர் தங்க.தமிழ்ச்செல்வன் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, இத்தொகுதியில் 2-ஆவது முறையாக இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் போட்டியிட்டதால் ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுகவின் கோட்டையாகவே கருதப்படுகிறது. 
இந்நிலையில், தற்போது நடைபெறும் இடைத் தேர்தலில் திமுக சார்பில் ஆ.மகாராஜன், அதிமுக  சார்பில் ஆ.லோகிராஜன் ஆகிய உடன் பிறந்த சகோதரர்கள் போட்டியிடுகின்றனர். 
இந்நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட  முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் தங்க.தமிழ்செல்வன் அமமுக கட்சியில் கொள்கை பரப்புச் செயலராக உள்ளார்.
 அதனால்  அமமுக வேட்பாளர் அறிவிப்புக்குப் பின் ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிடும் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com