ஆண்டிபட்டி சுற்றுவட்டார கிராமங்களில் புதிய பாசனத் திட்டத்தை நிறைவேற்றக் கோரி வீடுகள் தோறும் கருப்புக் கொடி ஏற்றி விவசாயிகள் போராட்டம்

ஆண்டிபட்டி சுற்றுவட்டாரத்தில் உள்ள கண்மாய், குளங்களுக்கு முல்லை பெரியாற்றிலிருந்து குழாய் மூலம் தண்ணீர்

ஆண்டிபட்டி சுற்றுவட்டாரத்தில் உள்ள கண்மாய், குளங்களுக்கு முல்லை பெரியாற்றிலிருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரும் புதிய பாசன திட்டத்தினை செயல்படுத்தக் கோரி வெள்ளிக்கிழமை கருப்புக்கொடி ஏற்றி கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 ஆண்டிபட்டி ஒன்றியத்தில் பல ஆண்டுகளாக நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க முல்லைப் பெரியாறு வாய்க்கால் திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் இந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனிடையே இப்பகுதி விவசாயிகள் ஒன்று சேர்ந்து தமிழ் விவசாயிகள் சங்கம் என்று தொடங்கி இத்திட்டம் குறித்து அரசுக்கு பலமுறை மனு அளித்தனர். ஆனால் இதுகுறித்து அரசு தரப்பில் எவ்வித நடவடிக்கையும் இல்லாத நிலையில் நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தல் மற்றும்  இடைத்தேர்தலில் இத்திட்டம் குறித்து வாக்குறுதி அளிக்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தியும் எந்த அரசியல் கட்சியும் வாக்குறுதி அளிக்கவில்லை. 
இதையடுத்து வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் சங்க ஆலேசானைக் கூட்டத்தில் ஆண்டிபட்டி ஒன்றியத்துக்குள்பட்ட 30 கிராம ஊராட்சிகளிலுள்ள 152 கிராமங்களிலும் வீடுகளின் முன்பு கருப்பு கொடிகளை ஏற்றி தங்களது எதிர்ப்பை காட்டுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஆண்டிபடடி ஒன்றியத்தின் கிழக்கு எல்லை கிராமமான ஏத்தகோவில், சித்தையகவுண்டன்பட்டி, அனுப்பபட்டி, போடிதாசன்பட்டி உள்ளிட்ட 152 கிராமங்களிலும் வீடுகள் மற்றும் தெருக்களில் கருப்புக்கொடி ஏற்றினர். மேலும் விவசாயிகள் சங்கத்தினர் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலையும் , ஆண்டிபட்டி தொகுதி இடைதேர்தலையும் புறக்கணிக்கப் போதவாக அறிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com