ஒட்டன்சத்திரம் கிறிஸ்டியன் பொறியியல் கல்லூரியில் 14-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவிற்கு கல்லூரியின் இயக்குநர் ஜேக்கப் தாமஸ் தலைமை வகித்தார். கல்லூரியின் முதல்வர் சி.கெசி செல்வ விஜிலா, கல்லூரியின் நிர்வாக அலுவலர் தாமஸ் இடியூல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இஸ்ரோவின் இணை இயக்குநர் கே.அழகுவேலு கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் 190 பேருக்கு பட்டங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.