தேனியில் சமுதாய வாக்கு வங்கியை குறி வைத்து களம் இறங்கும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

தேனி மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்,
தேனியில் சமுதாய வாக்கு வங்கியை குறி வைத்து களம் இறங்கும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்


தேனி மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அத் தொகுதியில் சமுதாய வாக்கு வங்கியை குறி வைத்து களம் இறக்கப்பட்டுள்ளார் என்று அக் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தேனி மாவட்டத்தில், மறு சீரமைப்பிற்கு முந்தைய பெரியகுளம் மக்களவை தொகுதியில் கடந்த 2004-ல் நடைபெற்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் டி.டி.வி.தினகரனைஎதிர்த்து திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜே.எம்.ஆரூண், 21,155 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 
மறுசீரமைக்கப்பட்ட தேனி மக்களவைத் தொகுதியில் கடந்த 2009 -இல்  நடைபெற்ற  தேர்தலில் அதிமுக வேட்பாளர் தங்க.தமிழ் செல்வனை எதிர்த்து திமுக கூட்டணியில், போட்டியிட்ட ஜே.எம்.ஆரூண் 6,302 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தேனி மக்களவைத் தொகுதியில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக, திமுக, காங்கிரஸ், மதிமுக ஆகிய கட்சிகள் தனித்தனியே போட்டியிட்டன. இதில், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடஜே.எம்.ஆரூணுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. 
இத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ரா.பார்த்திபன் 5,71,254 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்தத் தேர்தலில் திமுக வேட்பாளர் பொன்.முத்துராமலிங்கம் 2,56,722 வாக்குகள் பெற்று 2-ஆம் இடத்தையும், மதிமுக வேட்பாளர் அழகுசுந்தரம் 1,34,362 வாக்குகள் பெற்று 3-ஆம் இடத்தையும், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜே.எம்.ஆரூண் 71,432 வாக்குகள் பெற்று 4-ஆம் இடத்தையும் பிடித்தனர்.
இந்நிலையில், தற்போது திமுக கூட்டணியில் தேனி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இத் தொகுதியில் ஜே.எம்.ஆரூணுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினருக்கு இருந்து வந்தது. இந்நிலையில்,  தற்போது தேனி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் அக் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 
இத்தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணி கட்சிகளான திமுக, மதிமுக, கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றின் வாக்குகள் மற்றும் சிறுபான்மை சமுதாயத்தினரின் வாக்குகள் ஆதரவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. 
இந்நிலையில்  இத்தொகுதியில் பிரமலைக்கள்ளர், ஆதி திராவிடர் சமுதாயத்தை அடுத்து பெருவாரியாக உள்ள நாயக்கர் சமுதாய வாக்கு வங்கியை குறி வைத்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் களம் இறக்கப்பட்டுள்ளார் என்று அக்கட்சியினர் கூறுகின்றனர்.
அதிமுக வேட்பாளர் ப.ரவீந்திரநாத்குமார், அமமுக வேட்பாளர் தங்க.தமிழ்ச்செல்வன் ஆகியோரிடையே கட்சி மற்றும் ஜாதி வாக்குகளை பெறுவதில் கடும் போட்டி  நிலவும் நிலையில், காங்கிரஸ் வேட்பாளருக்கு கூட்டணி கட்சி வாக்குகளுடன் ஜாதி வாக்கு வங்கியும் கை கொடுக்கும் என்பது அக்கட்சியினர் எதிர்பார்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com