சிறுமி பாலியல் பலாத்காரம்: மகாராஷ்டிர இளைஞருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து மும்பைக்கு கடத்திச் சென்ற

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து மும்பைக்கு கடத்திச் சென்ற இளைஞருக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றம் 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்து புதன்கிழமை தீர்ப்பளித்தது.
 ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள ஆர்.கே.நகர், புதுசெந்நெல்குளம் கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் 2 ஆவது மகள் 10 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். குடும்ப வறுமை காரணமாக சுமங்கலி திட்டத்தின் கீழ், சிவகாசி ஆயுதப்படை குடியிருப்பு அருகேயுள்ள தொழிற்பேட்டையில் உள்ள நூற்பு ஆலையில் ஒன்றரை ஆண்டுகளாக இச்சிறுமி வேலை செய்து வந்தார்.
 இதே ஆலையில் மகாராஷ்டிர மாநிலம் சில்லிபண்டாரா என்ற இடத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரது மகன் அபிஷேக் (20) என்பவரும் வேலை செய்து வந்தார். அப்போது இச்சிறுமியும், இவரும் காதலித்து வந்தனராம். இதற்கிடையே திருமண ஆசை காட்டி, அச்சிறுமியை அபிஷேக் பாலியல் பலாத்காரம் செய்து, மும்பைக்கு கடத்திச் சென்று விட்டார். இதுகுறித்து சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து சிறுமியை தேடி வந்தனர்.
இந்நிலையில் 12.8.2015 அன்று அச்சிறுமியை, சிவகாசி பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டுவிட்டு, அபிஷேக் தப்பி ஓடிவிட்டார். பின்னர் போலீஸார் அபிஷேக்கை கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.லியாகத் அலி, அபிஷேக்கிற்கு, ஆசை வார்த்தை கூறிய குற்றத்திற்காக (சட்டப் பிரிவு 417) ஓராண்டு சிறைத் தண்டனையும், கற்பழித்தல் (பிரிவு 366) குற்றத்திற்காக 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.  மேலும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைக் பாதுகாக்கும் சட்டம் 2012 பிரிவு 3 மற்றும் 4 இன் கீழ் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்புக் கூறினார். தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com