விருதுநகர்

விருதுநகரில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பேரணி

DIN

விருதுநகரில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தலைக்கவசம் மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
  ரோசல்பட்டியில் தொடங்கிய இப்பேரணியில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு அருப்புக்கோட்டை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்துக்கு வந்தனர். அதில், தலைக் கவசம் அணிந்து செல்வதின் அவசியம், போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பது குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர். முன்னதாக விழிப்புணர்வு பேரணியை விஸ்வகர்மா சேவா வித்யாலயா பள்ளி தாளாளர் எம். கோகிலா, சிவசுப்பிரமணி, பாண்டியன் நகர் காவல் ஆய்வாளர் செந்தாமரை ஆகியோர் தொடக்கி வைத்தனர். 
இதில், சுமார் 50- க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர். 
     முடிவில், தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ரத்த தான முகாமில் 30 மாற்றுத் திறனாளிகள் ரத்த தானம் வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT