விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தமிழ் இலக்கிய பேரவை ஆலோசனைக் கூட்டம்

DIN

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பெருமாள் தேவன்பட்டியில் நாற்றங்கால் தமிழ் இலக்கிய பேரவையின் 3 ஆம் ஆண்டு தொடக்க விழா குறித்த ஆலோனைக் கூட்டம் மனமகிழ் மன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதற்கு பெருமாள் தேவன்பட்டி உறவின்முறை தலைவர் கி.சங்கர நாரயணன் தலைமை வகித்தார். புலவர் ச.ஆதிமூலம் மற்றும் முன்னாள் தமிழாசிரியர் கோ.ராஜாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
   இக்கூட்டத்தில், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ராஜபாளையம் பகுதியில் உள்ள உயர் நிலைப் பள்ளி மாணவர்களுக்கு "முப்பால் " என்ற தலைப்பிலும், மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு "தமிழ் அமுது " என்ற தலைப்பிலும், கல்லூரி மாணவர்களுக்கு "சங்கே முழங்கு" என்ற தலைப்பிலும் பேச்சுப் போட்டி நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இப்போட்டியை, 2019 ஜனவரி 13 ஆம் தேதி கலங்காப்பேரி அய்யன் கேந்திர வித்யாலயா பள்ளியில் நடத்துவது என்றும், இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு அதே பள்ளியில் 2019 ஜனவரி 20 ஆம் தேதி சான்றிதழ், கேடயம் மற்றும் புத்தகம் பரிசாக வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது. 
     முன்னதாக நிர்வாகி கி.தென்னரசு வரவேற்றார்.முன்னாள் காவலர் சூரிய சந்திரன் நன்றி கூறினார். இதில் சொக்கலிங்காபுரம் ஆடிட்டர் வைரவன், கலங்காப்பேரி வைஷ்ணவ ரத்னா, காளிமுத்து, அய்யன் கேந்திர வித்யாலயா தாளாளர் பால் கண்ணன், நூர்சாகிபுரம் க.துள்ளுக்குட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

காரைக்காலில் தீவிர வாகனச் சோதனை நடத்த அறிவுறுத்தல்

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

SCROLL FOR NEXT